மாதாவின் விழாக்கள்

பெருவிழா நாட்கள்
ஜனவரி 1: மரியா இறைவனின் தாய்
   'வானதூதர் மரியாவைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்ட டைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடு வீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்றார்.' (லூக்கா 1:30-32)
   "ஞானிகள் வீட்டிற்குள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண் டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்." (மத்தேயு 2:11)
   "வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த தால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியா தன் கீழ்ப்படிதலால் மனுக் குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." - புனித இரனேயுஸ்
ஆகஸ்ட் 15: மரியாவின் விண்ணேற்பு
   'மரியா பின்வருமாறு கூறினார்: "இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள் ளார்." (லூக்கா 1:46,48-49)
   "மனித அவதாரம் எடுத்த இறைவன், தன் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தபோது, அவரது உடலையும் அழியாமல் காத்துக்கொண்டார்; அவரை விண்ணகத்திற்கு எடுத்துச்சென்று பெரு மைப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார்." - புனித ஜான் டமாசீன்
   "என்றும் கன்னியும் இறைவனின் அமலோற்பவ அன்னையுமாகிய மரியா, தன் உலக வாழ் வினை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்." (விசுவாசக் கோட்பாடு 1950)
டிசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம்
   "மரியா இயேசுவின் தாயாகுமாறு, இறைவனின் அருளால் பாவக் கறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்." - புனித அகஸ்டின்
   "பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்." (1830ல் மரியன்னையின் பாரிஸ் காட்சி)
   "மரியா, தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும் சென்மப் பாவத்தின் கரைகளி லிருந்து பாதுகாக்கப்பட்டார்." (விசுவாசக் கோட்பாடு 1854)

விழா நாட்கள்
மே 31: மரியா - எலிசபெத் சந்திப்பு
   'அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.' (லூக்கா 1:39-45)
செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு
   'எருசலேம் நகரில் வாழ்ந்த யோவாக்கிம் - அன்னா தம்பதியர் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்க ளுக்கு அறிவித்தார். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வான தூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.' (மரியாவின் வாழ்வு)

நினைவு நாட்கள்
ஆகஸ்ட் 22: கன்னி மரியா விண்ணக மண்ணக அரசி
   "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிர வனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்." (திருவெளிப்பாடு 12:1)
செப்டம்பர் 15: புனித வியாகுல அன்னை
   'சிமியோன் இயேசுவின் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாள மாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள் ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்." (லூக்கா 2:34-35)
அக்டோபர் 7: புனித செபமாலை அன்னை
   "நான் செபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தி அமைக்க வேண்டும். எல் லோரும் செபமாலை செபிக்க வேண்டும்." (1917ல் மரியன்னையின் பாத்திமா காட்சி)
நவம்பர் 21: கன்னி மரியாவைக் கோவிலில் ஒப்புக்கொடுத்தது
   'மரியாவின் பெற்றோர் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்ப ணிப்பதாக நேர்ந்து கொண்டனர். மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தனர்.' (மரியாவின் வாழ்வு)

விருப்ப நினைவு நாட்கள்
பிப்ரவரி 11: தூய லூர்து அன்னை
   "நானே அமல உற்பவம். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் மேற்கொள்ளப் படவேண்டும்." - லூர்து அன்னை
மே 13: தூய பாத்திமா அன்னை
   "மக்கள் தங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்." - பாத்திமா அன்னை
ஜூன்/ஜூலை: மரியாவின் மாசற்ற இதயம்
   "உலகில் எனது மாசற்ற இதயத்தின் பக்தி நிறுவப்படவேண்டும் என்று இறைவன் விரும்பு கிறார். உலகம் எனது மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கப்படவேண்டும்." (1917ல் மரியன்னை யின் பாத்திமா காட்சி)
டிசம்பர் 12: தூய குவாடலூப்பே அன்னை
   "வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவ ருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன்." - குவாடலூப்பே அன்னை