Sunday, 8 December 2013

டிசம்பர் 9, 2013

கன்னி மரியாவின் அமல உற்பவம்
Immaculate Conception of Virgin Mary

Sunday, 15 September 2013

Sunday, 8 September 2013

செப்டம்பர் 8, 2013

கன்னி மரியாவின் பிறப்பு
Birth of Virgin Mary

Thursday, 15 August 2013

ஆகஸ்ட் 15, 2013

மரியன்னையின் விண்ணேற்பு
Assumption of Our Lady

Monday, 5 August 2013

ஆகஸ்ட் 5, 2013

தூய பனிமய அன்னை
Our Lady of Snows

Saturday, 3 August 2013

ஆகஸ்ட் 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   If only you would open your hearts to me with complete trust, you would comprehend everything. You would comprehend with how much love I am calling you; with how much love I desire to change you, to make you happy; with how much love I desire to make you followers of my Son and give you peace in the fullness of my Son. You would comprehend the immeasurable greatness of my motherly love. That is why, my children, pray because through prayer your faith grows and love is born, the love along which even the cross is not unendurable because you do not carry it alone.
   In union with my Son you glorify the name of the Heavenly Father. Pray, pray for the gift of love, because love is the only truth: it forgives everything, it serves everyone and it sees a brother in everyone. My children, my apostles, great is the trust that the Heavenly Father has given you through me, His handmaid, to help those who do not know Him, that they may reconcile with Him and follow Him. That is why I am teaching you love, because only if you have love will you be able to respond to Him. Again I am calling you to love your shepherds and to pray that, at this difficult time, the name of my Son may be glorified under their guidance. Thank you
!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   நீங்கள் முழு நம்பிக்கையோடு உங்கள் இதயங்களை எனக்கு திறந் தால் மட்டுமே, நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். நான் உங்களை எவ்வளவு அன்போடு அழைக்கிறேன்; உங்களை மாற்றவும், உங்களை மகிழ்ச்சிப்படுத்தவும் எவ்வளவு அன்போடு நான் விரும்புகி றேன்; உங்களை என் மகனைப் பின்பற்றுபவர்களாக மாற்றவும், என் மகனின் நிறைவில் உங்களுக்கு அமைதி அளிக்கவும் எவ்வளவு அன் போடு நான் விரும்புகிறேன் என்பவற்றை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அளவிட முடியாத என் தாயன்பை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்காகவே என் குழந் தைகளே, செபியுங்கள். ஏனெனில் செபத்தின் வழியாக உங்கள் விசுவாசம் வளர்வதுடன் அன்பும் பிறக்கும். இந்த அன்பினால் சிலுவையும் தாங்க முடியாததாக இருக்காது, ஏனெ னில் நீங்கள் அதை தனியாக சுமப்பதில்லை.
   நீங்கள் என் மகனோடு ஒன்றித்து விண்ணகத் தந்தையின் பெயரை மாட்சிப்படுத்துங் கள். செபியுங்கள், அன்பெனும் கொடைக்காக செபியுங்கள், ஏனெனில் அன்பு மட்டுமே ஒரே உண்மை: அது அனைத்தையும் மன்னிக்கிறது, அனைவருக்கும் தொண்டு செய்கி றது, மேலும் அனைவரிலும் சகோதரரைக் காண்கிறது. என் குழந்தைகளே, என் திருத் தூதர்களே, விண்ணகத் தந்தையை அறியாதவர்கள் அவரோடு ஒப்புரவாகவும், அவரைப் பின்பற்றவும் உதவ, அவரது அடிமையாகிய என் வழியாக உங்களுக்கு தந்திருக்கிற நம் பிக்கை பெரியது. அதனால்தான் நான் உங்களுக்கு அன்பைக் கற்பிக்கிறேன், ஏனெனில் நீங்கள் அன்பைக் கொண்டிருந்தால் மட்டுமே அவருக்கு பதிலளிக்க முடியும். இந்த கடின மான நேரத்தில், உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்யவும், அவர்களுக்காக செபிக்கவும் நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன். அவர்களது வழிகாட்டுதலின் கீழ் என் மகனின் பெயர் மாட்சிப்படுத்தப்படும். நன்றி!"

Tuesday, 16 July 2013

ஜூலை 16, 2013

தூய கார்மேல் அன்னை
Our Lady of Carmel

Wednesday, 3 July 2013

ஜூலை 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   With a motherly love I am imploring you to give me the gift of your hearts, so I can present them to my Son and free you – free you from all the evil enslaving and distancing you all the more from the only Good – my Son – from everything which is leading you on the wrong way and is taking peace away from you.
   I desire to lead you to the freedom of the promise of my Son, because I desire for God's will to be fulfilled completely here; and that through reconciliation with the Heavenly Father, through fasting and prayer, apostles of God's love may be born – apostles who will freely, and with love, spread the love of God to all my children – apostles who will spread the love of the trust in the Heavenly Father and who will keep opening the gates of Heaven. Dear children, extend the joy of love and support to your shepherds, just as my Son has asked them to extend it to you.
Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   உங்கள் இதயங்களை எனக்கு பரிசாகத் தருமாறு உங்களை நான் தாயன்புடன் கெஞ்சிக் கேட்கிறேன். அதன் மூலம் நான் அவற்றை என் மகனிடம் கொடுத்து, அனைத்துக்கும் மேலான ஒரே நன்மையில் இருந்து உங்களை தூரமாக்குவதும், அடிமையாக்குவதுமான எல்லா தீமையில் இருந்தும், உங்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வ தும், உங்கள் அமைதியை அகற்றிவிடுவதுமான அனைத்தில் இருந்தும் என் மகன் மூலம் உங்களை விடுவிக்க முடியும்.
   என் மகன் வாக்களித்த சுதந்திரத்தை நோக்கி உங்களை வழிநடத்த நான் விரும்புகி றேன். ஏனெனில் கடவுளின் திருவுளம் இங்கு முழுமையாக நிறைவேற நான் விரும்பு கிறேன்; செபம் மற்றும் நோன்பின் மூலம் விண்ணகத் தந்தையுடன் ஏற்படும் ஒப்புரவின் வழியாக, இறையன்பின் அப்போஸ்தலர்கள் பிறப்பார்கள். அந்த அப்போஸ்தலர்கள் சுதந் திரமாகவும் அன்புடனும், கடவுளின் அன்பை என் குழந்தைகள் அனைவரிடமும் பரப்பு வார்கள். அந்த அப்போஸ்தலர்கள் விண்ணகத் தந்தை மீதான நம்பிக்கையின் அன்பை பரப்புகிறவர்களாகவும், விண்ணகத்தின் கதவுகளை திறந்து வைத்திருக்கிறவர்களாக வும் இருப்பார்கள். அன்பு குழந்தைகளே, என் மகன் உங்கள் மேய்ப்பர்களிடம் உங்களை நோக்கி விரிவாக்க கேட்பது போன்று, அவர்கள் மீதான ஆதரவு மற்றும் அன்பின் மகிழ்ச் சியை விரிவாக்குவாக்குங்கள். நன்றி!"

Saturday, 8 June 2013

ஜூன் 8, 2012

மரியாவின் மாசற்ற இதயம்
Immaculate heart of Mary

Monday, 3 June 2013

ஜூன் 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   In this restless time, anew I am calling you to set out after my Son – to follow him. I know of the pain, suffering and difficulties, but in my Son you will find rest; in him you will find peace and salvation. My children, do not forget that my Son redeemed you by his Cross and enabled you, anew, to be children of God; to be able to, anew, call the Heavenly Father: ‘Father’. To be worthy of the Father, love and forgive, because your Father is love and forgiveness.
   Pray and fast, because that is the way to your purification, it is the way of coming to know and becoming cognizant of the Heavenly Father. When you become cognizant of the Father, you will comprehend that he is all you need. I, as a mother, desire my children to be in a community of one single people where the Word of God is listened to and carried out. Therefore, my children, set out after my Son. Be one with him. Be God’s children. Love your shepherds as my Son loved them when he called them to serve you.
Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   இந்த அமைதியற்ற நேரத்தில், என் மகனை நோக்கி வரவும், அவரை பின்பற்றவும் நான் உங்களை புதிதாக அழைக்கிறேன். அதிலுள்ள வலி, வேதனை மற்றும் பிரச்சனைகளை நான் அறிவேன், ஆனால் என் மகனில் நீங்கள் இளைப்பாறுதல் காண்பீர்கள்; அவரிலே நீங்கள் அமைதியையும் மீட்பையும் காண்பீர்கள். என் குழந்தைகளே, என் மகன் தனது சிலுவையின் வழியாக உங்களை மீட்டு, புதிதாக உங் களை கடவுளின் பிள்ளைகளாக மாற்றினார் என்பதை மறவாதீர்கள்; புதிதாக, விண்ணகத் தந்தையை 'தந்தை' என்று அழைக்கும்படி செய்தார். தந்தைக்கு உரியவர்கள் ஆகுமாறு அன்பு செய்யுங்கள், மன்னியுங்கள், ஏனெனில் உங்கள் தந்தை அன்பாகவும் மன்னிப்பாகவும் இருக்கிறார்.
   செபியுங்கள், நோன்பிருங்கள், ஏனெனில் அதுவே நீங்கள் தூய்மையாக வழி, அது விண்ணகத் தந்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் விழிப்புணர்வு பெறுவதற்குமான வழி. தந்தையைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வு அடையும்போது, உங்கள் தேவை அனைத் தும் அவரே என்பதை புரிந்துகொள்வீர்கள். ஒரு தாயாக, என் குழந்தைகள் அனைவரும் கடவுளின் வார்த்தையை கேட்டு, பிறரிடம் தாங்கிச் செல்லும் ஒரே குழுமத்தின் மக்களாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். எனவே, என் குழந்தைகளே, என் மகனை நோக்கி வாருங்கள். அவரோடு ஒன்றித்திருங்கள். கடவுளின் பிள்ளைகளாக இருங்கள். உங்களுக்கு பணியாற்ற அழைத்தபோது உங்கள் மேய்ப்பர்களை என் மகன் அன்பு செய் தது போன்று, நீங்களும் அவர்களை அன்பு செய்யுங்கள். நன்றி!"

Friday, 31 May 2013

மே 31, 2013

மரியா - எலிசபெத் சந்திப்பு
Mary - Elizabeth Visitation

Friday, 24 May 2013

மே 24, 2013

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை
Our Lady Help of Christians

Monday, 13 May 2013

மே 13, 2012

தூய பாத்திமா அன்னை
Our Lady of Fatima

Friday, 3 May 2013

மே 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   Anew, I am calling you to love and not to judge. My Son, according to the will of the Heavenly Father, was among you to show you the way of salvation, to save you and not to judge you. If you desire to follow my Son, you will not judge but love like your Heavenly Father loves you. And when it is the most difficult for you, when you are falling under the weight of the cross do not despair, do not judge, instead remember that you are loved and praise the Heavenly Father because of his love.
   My children, do not deviate from the way on which I am leading you. Do not recklessly walk into perdition. May prayer and fasting strengthen you so that you can live as the Heavenly Father would desire; that you may be my apostles of faith and love; that your life may bless those whom you meet; that you may be one with the Heavenly Father and my Son. My children, that is the only truth, the truth that leads to your conversion, and then to the conversion of all those whom you meet – those who have not come to know my Son – all those who do not know what it means to love. My children, my Son gave you a gift of the shepherds. Take good care of them. Pray for them. Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே! 
   தீர்ப்பிடுவதற்கு மாறாக அன்பு செய்ய நான் உங்களைப் புதிதாக அழைக்கிறேன். விண்ணகத் தந்தையின் திருவுளத்துக்கேற்ப என் மகன், உங்களைத் தீர்ப்பிட அல்ல, உங்களை மீட்க உங்கள் நடுவே இருந்தபோது உங்களுக்கு மீட்பின் வழியைக் காட்டினார். நீங்கள் என் மகனைப் பின்பற்ற விரும்பினால், உங்கள் விண்ணகத் தந்தை உங்களை அன்பு செய்தது போன்று, நீங்களும் தீர்ப்பிடாமல் அன்பு செய்ய வேண்டும். மேலும் அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக் கும் வேளையில், சிலுவையின் பளுவின் கீழ் நீங்கள் விழுந்து கிடக்கும்போது நம்பிக்கை இழக்க வேண்டாம், தீர்ப்பிட வேண்டாம், மாறாக நீங்கள் அன்பு செய்யப்படுகிறீர்கள் என்பதை நினைவுகூர்ந்து, விண்ணகத் தந்தையின் அன்புக்காக அவரைப் புகழுங்கள்.
   என் குழந்தைகளே, நான் உங்களை நடத்தும் வழியில் இருந்து விலகிச் செல்லாதீர்கள். பொறுப்பற்ற முறையில் அழிவை நோக்கி நடக்க வேண்டாம். செபமும் நோன்பும் உங் களை பலப்படுத்தட்டும், அதன் மூலம் விண்ணகத் தந்தை விரும்புவது போன்று நீங்கள் வாழ முடியும்; அதாவது, நீங்கள் விசுவாசம் மற்றும் அன்புக்கான எனது திருத்தூதர் களாக இருப்பீர்கள்; நீங்கள் சந்திப்பவர்களுக்கு உங்கள் வாழ்வு ஆசியாக அமையும்; நீங்கள் விண்ணகத் தந்தையோடும் எனது மகனோடும் ஒன்றாய் இருப்பீர்கள். என் குழந்தைகளே, அது மட்டுமே ஒரே உண்மை, உங்களை மனமாற்றத்துக்கு வழிநடத்தும் உண்மை, நீங்கள் சந்திக்கும் அனைவரையும் - எனது மகனை அறியாதவர்களை - அன்பு என்றால் என்னவென்று தெரியாத அனைவரையுமே மனந்திருப்பும். என் குழந்தைகளே, எனது மகன் உங்களுக்கு மேய்ப்பர்கள் என்ற கொடையை அளித்திருக்கிறார். அவர்கள் மீது நன்முறையில் அக்கறை கொள்ளுங்கள். அவர்களுக்காக செபியுங்கள்.
நன்றி!"

Sunday, 7 April 2013

ஏப்ரல் 8, 2013

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
Annunciation of Birth of Our Lord

Wednesday, 3 April 2013

ஏப்ரல் 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   I am calling you to be one with my Son in spirit. I am calling you, through prayer, and the Holy Mass when my Son unites Himself with you in a special way, to try to be like Him; that, like Him, you may always be ready to carry out God’s will and not seek the fulfillment of your own. Because, my children, it is according to God’s will that you are and that you exist, and without God’s will you are nothing. As a mother, I am asking you to speak about the glory of God with your life because, in that way, you will also glorify yourself in accordance to His will.
   Show humility and love for your neighbor to everyone. Through such humility and love, my Son saved you and opened the way for you to the Heavenly Father. I implore you to keep opening the way to the Heavenly Father for all those who have not come to know Him and have not opened their hearts to His love. By your life, open the way to all those who still wander in search of the truth. My children, be my apostles who have not lived in vain. Do not forget that you will come before the Heavenly Father and tell Him about yourself. Be ready! Again I am warning you, pray for those whom my Son called, whose hands He blessed and whom He gave as a gift to you. Pray, pray, pray for your shepherds. Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே! 
   என் மகனின் ஆவியில் ஒன்றாய் இருக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். செபம் மற்றும் என் மகன் சிறப்பான வகையில் தன்னை உங்களோடு ஒன்றிணைக்கும் திருப்பலி வழியாக அவரைப் போன்று மாற முயற்சிக்க நான் உங்களை அழைக்கிறேன்; அவரைப் போன்று, அதாவது, உங்கள் விருப்பத்தின் நிறைவைத் தேடாமல், கடவுளின் திருவுளத்தையே எப்பொழுதும் செயல்படுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், என் குழந்தைகளே, கடவுளின் திருவுளத்தாலே நீங்கள் இருக்கிறீர்கள், நீங்கள் வாழ்கிறீர்கள், கடவுளின் திருவுளமின்றி நீங்கள் ஒன்றுமில்லை. உங்கள் வாழ்வின் வழியாக கடவுளின் மாட்சியைப் பற்றி பேசுமாறு, ஒரு தாயாக நான் உங்களை கேட்கிறேன். ஏனெனில், அதன் வழியாக அவரது திருவுளத்தின்படி உங்களையும் நீங்கள் மாட்சிப்படுத்திக் கொள்வீர்கள்.
   உங்களை அடுத்திருப்போரிடமும் அனைவரிடமும் தாழ்ச்சியும் அன்பும் காட்டுங்கள். இத்தகைய தாழ்ச்சி மற்றும் அன்பின் மூலமாகவே, என் மகன் உங்களை மீட்டு, விண்ணகத் தந்தையிடம் செல்லும் வழியை திறந்துவிட்டார். விண்ணகத் தந்தையை அறியாமலும், அவரது அன்புக்கு தங்கள் இதயங்களைத் திறக்காமலும் இருக்கும் அனைவருக்கும் அவரிடம் செல்லும் வழியைத் திறக்குமாறு நான் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். இதுவரை உண்மையைத் தேடாமல் அலைந்து திரியும் அனைவருக்கும் உங்கள் வாழ்வின் மூலம் வழியைத் திறந்துவிடுங்கள். என் குழந்தைகளே, வீணாக வாழாமல் என் திருத்தூதர்களாக இருங்கள். நீங்கள் விண்ணகத் தந்தையின் முன் வந்து உங்களைப் பற்றி அவரிடம் கூற வேண்டும் என்பதை மறவாதீர்கள். தயாராய் இருங்கள்! மீண்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன், என் மகனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, அவரால் கரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, உங்களுக்கு கொடையாக வழங்கப்பட்டிருப்பவர்களுக்காக செபியுங்கள். செபியுங்கள், செபியுங்கள், உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள்.
நன்றி!"

Sunday, 3 March 2013

மார்ச் 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   Anew, in a motherly way, I am calling you not to be of a hard heart. Do not shut your eyes to the warnings which the Heavenly Father sends to you out of love. Do you love Him above all else? Do you repent for having often forgotten that the Heavenly Father, out of His great love, sent His Son to redeem us by the Cross? Do you repent for not having accepted the message?
   My children, do not resist the love of my Son. Do not resist hope and peace. Along with your prayers and fasting, by His Cross, my Son will cast away the darkness that wants to surround you and come to rule over you. He will give you the strength for a new life. Living it according to my Son, you will be a blessing and a hope to all those sinners who wander in the darkness of sin. My children, keep vigil. I, as a mother, am keeping vigil with you. I am especially praying and watching over those whom my Son called to be light-bearers and carriers of hope for you – for your shepherds. Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே! 
   தாய்க்குரிய ஒரு புதிய வழியில், நீங்கள் கடின உள்ளத்தோடு இருக் காதவாறு நான் உங்களை அழைக்கிறேன். விண்ணக தந்தை அன்பி னால் உங்களுக்கு அனுப்பும் எச்சரிக்கைகளுக்கு உங்கள் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். அனைத்துக்கும் மேலாக அவரை நீங்கள் அன்பு செய்கிறீர்களா? விண்ணக தந்தை, தமது பேரன்பினால் சிலுவையின் வழியாக நம்மை மீட்க தம் மகனை அனுப்பியதை மறந்ததற்காக நீங் கள் மனம் வருந்தினீர்களா? அவரது செய்தியை ஏற்றுக்கொள்ளாததற் காக நீங்கள் மனம் வருந்தினீர்களா?
   என் குழந்தைகளே, எனது மகனின் அன்பை தடுக்காதீர்கள். நம்பிக்கையையும் அமைதி யையும் தடுக்காதீர்கள். உங்களை சூழ்ந்து, உங்களை ஆட்சி செய்ய விரும்பும் இருளை, உங்கள் செபம் மற்றும் நோன்போடு சேர்த்து, என் மகன் தனது சிலுவையால் விரட்டி விடுவார். அவர் உங்களுக்கு புதிய வாழ்வுக்கான பலத்தை தருவார். எனது மகனுக்கு ஏற்ப அதை வாழ்ந்தால், பாவ இருளில் அலையும் அனைத்து பாவிகளுக்கும் நீங்கள் ஆசீராய் இருப்பீர்கள். என் குழந்தைகளே, தொடர்ந்து விழித்திருங்கள். ஒரு தாயாக, நானும் உங்களோடு தொடர்ந்து விழித்திருப்பேன். ஒளியைத் தாங்குபவர்களாகவும், உங்களுக்கு நம்பிக்கையை சுமந்து வருபவர்களாகவும் எனது மகனால் அழைக்கப்பட்ட உங்கள் மேய்ப்பர்களை கண்காணித்து நான் சிறப்பாக செபித்து வருகிறேன்.
நன்றி!"

Sunday, 10 February 2013

பிப்ரவரி 11, 2013

தூய லூர்து அன்னை
Our Lady of Lourdes

Sunday, 3 February 2013

பிப்ரவரி 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   Love is bringing me to you – the love which I desire to teach you also – real love; the love which my Son showed you when He died on the Cross out of love for you; the love which is always ready to forgive and to ask for forgiveness. How great is your love? My Motherly heart is sorrowful as it searches for love in your hearts. You are not ready to submit your will to God’s will out of love.
   You cannot help me to have those who have not come to know God’s love to come to know it, because you do not have real love. Consecrate your hearts to me and I will lead you. I will teach you to forgive, to love your enemies and to live according to my Son. Do not be afraid for yourselves. In afflictions my Son does not forget those who love. I will be beside you. I will implore the Heavenly Father for the light of eternal truth and love to illuminate you. Pray for your shepherds so that through your fasting and prayer they can lead you in love. Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே! 
   அன்பே என்னை உங்களிடம் கொண்டு வருகிறது - அன்பையே நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறேன் - உண்மையான அன்பை; உங்கள் மீதான அன்புக்காக சிலுவையில் இறக்கும்போது என் மகன் காண்பித் தாரே அந்த அன்பை; அந்த அன்பு மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. உங்கள் அன்பு எவ்வளவு சிறந் தது? உங்கள் உள்ளங்களில் அன்பைத் தேடும்போது, என் தாயுள்ளம் மிகுந்த துயர் அடைகிறது. உங்கள் விருப்பத்தை கடவுளின் திருவுளத் துக்கு அன்பினால் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லை.
   கடவுளின் அன்பை அறியாதவர்கள் அதை அறிந்துகொள்ள உங்களால் எனக்கு உதவ முடியாது, ஏனெனில் உங்களிடம் உண்மையான் அன்பு இல்லை. உங்கள் உள்ளங்களை எனக்கு அர்ப்பணிக்கும் பொழுது, நான் உங்களை வழிநடத்துவேன். மன்னிக்கவும், உங்கள் எதிரிகளை அன்பு செய்யவும், என் மகனுக்கு ஏற்ப வாழவும் நான் உங்களுக்கு கற்பிப்பேன். உங்களுக்காக பயப்பட வேண்டாம். அன்பு செய்பவர்களை என் மகன் துன்ப வேளைகளில் மறக்கமாட்டார். நான் உங்கள் அருகில் இருப்பேன். நித்திய உண்மை மற்றும் அன்பின் ஒளியால் உங்களை ஒளிர்விக்க விண்ணக தந்தையிடம் நான் இறைஞ் சுவேன். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள்; அப்போது உங்கள் நோன்பாலும் செபத் தாலும் அவர்கள் உங்களை அன்பில் வழிநடத்துவார்கள்.
நன்றி!"

Thursday, 3 January 2013

ஜனவரி 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   With much love and patience I strive to make your hearts like unto mine. I strive, by my example, to teach you humility, wisdom and love because I need you; I cannot do without you my children. According to God’s will I am choosing you, by his strength I am strengthening you.
   Therefore, my children, do not be afraid to open your hearts to me. I will give them to my Son and in return, he will give you the gift of divine peace. You will carry it to all those whom you meet, you will witness God’s love with your life and you will give the gift of my Son through yourselves. Through reconciliation, fasting and prayer, I will lead you. Immeasurable is my love. Do not be afraid. My children, pray for the shepherds. May your lips be shut to every judgment, because do not forget that my Son has chosen them and only he has the right to judge. Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே! 
   மிகுந்த அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் இதயங்களை என் னுடையதைப் போன்று மாற்ற முயற்சிக்கிறேன். நீங்கள் எனக்குத் தேவை என்பதால், எனது எடுத்துக்காட்டின் வழியாக தாழ்ச்சி, ஞானம், அன்பு ஆகியவற்றை உங்களுக்கு கற்பிக்க நான் முயற்சிக்கிறேன். கடவுளின் திருவுளப்படி நான் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அவரது பலத்தால் நான் உங்களை பலப்படுத்துகிறேன்.
   எனவே, என் குழந்தைகளே, உங்கள் இதயங்களை எனக்கு
த் திறக்க பயப்பட வேண்டாம். நான் அவற்றை என் மகனிடம் கொடுப்பேன், அவர் உங்களுக்கு இறை அமைதியின் கொடையைத் தருவார். நீங்கள் சந்திக்கும் அனைவரிடம் அதை நீங்கள் கொண்டு சென்று, உங்கள் வாழ்வால் கடவுளின் அன்புக்கு நீங்கள் சான்று பகர்வதுடன், உங்கள் வழியாகவே என் மகனின் கொடையை அளிப்பீர்கள். ஒப்புரவு, நோன்பு மற்றும் செபத்தின் வழியாக நான் உங்களை வழிநடத்துவேன். என் அன்பு அளவிட முடியாதது. பயப்பட வேண்டாம். என் குழந்தைகளே, மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். ஒவ்வொரு தீர்ப்புக்கும் உங்கள் உதடுகள் மூடி இருக்கட்டும், ஏனெனில் என் மகனே அவர்களைத் தேர்ந்தெடுத்தார் என்பதை மறவாதீர்கள்; மேலும், அவருக்கு மட்டுமே தீர்ப்பிடும் உரிமை உள்ளது. நன்றி!"

Tuesday, 1 January 2013

ஜனவரி 1, 2013

கன்னி மரியா இறைவனின் தாய்
Virgin Mary the Mother of God