Saturday 9 June 2012

ஜூன் 16, 2012

மரியாவின் மாசற்ற இதயம்
Immaculate heart of Mary

Saturday 2 June 2012

ஜூன் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   I am continuously among you because, with my endless love, I desire to show you the door of Heaven. I desire to tell you how it is opened: Through goodness, mercy, love and peace – through my Son. Therefore, my children, do not waste time on vanities. Only knowledge of the love of my Son can save you. Through that salvific love and the Holy Spirit he chose me and I, together with him, am choosing you to be apostles of his love and will.
   My children, great is the responsibility upon you. I desire that by your example you help sinners regain their sight, enrich their poor souls and bring them back into my embrace. Therefore pray; pray, fast and confess regularly. If receiving my Son in the Eucharist is the centre of your life, then do not be afraid, you can do everything. I am with you. Everyday I pray for the shepherds and I expect the same of you. Because, my children, without their guidance and strengthening through their blessing, you can not do it. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   நான் உங்கள் நடுவே தொடர்ந்து இருக்கின்றேன் ஏனென்றால், எனது முடிவற்ற அன்பால் உங்களுக்கு வானக வாயிலைக் காட்ட விரும்பு கிறேன். அது எப்படி திறக்கும் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்: நன்மைத்தனம், இரக்கம், அன்பு மற்றும் அமைதியால் என் மகன் வழியாகவே அது திறக்கும். எனவே என் குழந்தைகளே, நேரத்தை வீணாக கழிக்காதீர்கள். எனது மகனின் அன்பைப் பற்றிய அறிவே உங்களை மீட்கும். இந்த மீட்பளிக்கும் அன்பாலும் தூய ஆவியாலும் அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார், நான் அவரோடு இணைந்திருக்கிறேன், அவரது அன்பு மற்றும் திருவுளத்தின் திருத்தூதர்களாக விளங்குமாறு நான் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
   என் குழந்தைகளே, உங்களுடைய பொறுப்பு பெரியது. உங்களது முன்மாதிரியால், பாவிகள் மனந்திரும்பி தங்கள் ஆன்மாக்களின் ஏழ்மையைக் கண்டு வளப்படுத்த, அவற்றை எனது அரவணைப்பில் ஒப்படைக்க நீங்கள் உதவ வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே செபியுங்கள்; செபியுங்கள், நோன்பிருங்கள் மேலும் ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதைக் கைவிடாதீர்கள். நீங்கள் நற்கருணையில் எனது மகனை உட்கொள்ளும்போது, அவர் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறார், மேலும் நீங்கள் யாரும் பயப்படவேண்டாம், உங்களால் அனைத்தையும் செய்ய முடியும். நான் உங்க ளோடு இருக்கிறேன். நான் தினந்தோறும் மேய்ப்பர்களுக்காக செபிக்கிறேன், உங்களிட மிருந்தும் அதை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் என் குழந்தைகளே, அவர்களது வழி காட்டுதலும், ஆசீரால் வரும் வலிமையூட்டுதலும் இன்றி உங்களால் இதைச் செய்ய முடியாது. நன்றி!"